Wednesday, December 10, 2025

100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்..!

Ad 728x90

 


📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்..!
✅👉 மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலில் ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது அவர்,
“மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என பிரதேச செயலாளரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
-- ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: