Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Wednesday, June 10, 2026

ஒலுவில் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது..!

ஒலுவில் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது..!


 📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 ஒலுவில் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது..!


✍️ எஸ். சினீஸ் கான்


✅👉 கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉 ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளை முன்னாள் அமைச்சர் அஷ்ரப் எந்தவொரு தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையும் மேற்கொள்ளாமல் நிர்மாணித்ததாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றாக பிழையான கூற்றாகும். அது தொடர்பில் நாங்கள் மன வேதனை அடைகிறோம். அதேநேரம் ஒலுவில் துறைமுகம் மணல் அரிப்பால் பாதிக்கப்பட காரணம் துறைமுக அதிகாரசபையின் கவனயீனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையினுடைய முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் நிந்தவூரில் ஆரம்பித்துவைக்கப்பட்ட கலாசார மண்டபத்தின் பணிகளை பூரணப்படுத்துவதற்கு ஜனாதிபதி 300 மில்லியன் ரூபா ஒதுக்கியமைக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


அதேநேரம் அங்கு இடம்பெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி ஒலுவில் துறைமுகம் தொடர்பில் பேசியிருந்தார். அதாவது இந்த துறைமுகம் சரியான தொழிநுட்ப அறிக்கை பெற்றுக்காெள்ளாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலே அடிக்கடி பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதிக்கு யாரோ வழங்கிய பிழையான தகவலினால்தான் இவ்வாறு தெரிவித்திருப்பார் என நினைக்கிறோம்.


உண்மையில் ஒலுவிலில் துறைமுகம் நிர்மாணிக்க 1997ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கைகள் சாத்தியக்கூறு செய்வதற்காக 1999ஆம் ஆண்டு லங்கா ஹைட்ரோனிக் நிறுவகம் நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவமழைகளையும் பார்த்து, இந்த துறைமுகம் பொருத்தமானது என அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. 


அதேபோன்று 1999ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பறிக்கை தயாரிக்கப்பட்டது. அத்துடன் சாத்தியக்கூறு ஆய்வு மத்திய பொறியியல் ஆலோசனை பிரிவால் மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையிலும் ஒலுவில் துறைமுகம் சாத்தியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2000ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு, அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த தலைவர் அஷ்ரப்பின் வேண்டுகோளின் பிரகாரம், டென்மார்க் அரசாங்கம் வட்டியில்லா கடன் அடிப்படையில் 43 மில்லியன் யூரோ வழங்குவதற்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் எமது தலைவர் அகால மரணமடைந்தார்.


அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஒலுவில் துறைமுக வேலைத்திட்டம் டென்மார்க் ஹொட்கார்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. பின்னர் இலங்கை துறைமுக அதிகாரசபையும் டென்மார்க் அரசாங்கமும் இணைந்து உலகில் பிரபல்யமான 5 தொழில்நுட்ப நிறுவனங்களை நியமித்து, தொழில்நுட்ப, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை போன்ற அனைத்து விடயங்களை மேற்கொண்ட பின்னரே துறைமுகம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.


ஆனால் தலைவர் அஷ்ரப் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளை எந்தவொரு தொழில்நுட்ப அறிக்கை, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றாக பிழையான கூற்றாகும். ஆனால் இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யத் தவறியிருக்கிறது. பொதுவாக எல்லா துறைமுகங்களிலும் பருவ மழைகளின்போது வருகின்ற மணலை சுத்திகரித்து அரிப்பு ஏற்படுகின்ற இடங்களுக்கு மணலை நிரப்புவதற்கு இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு, காலி துறைமுகத்திலும் அது இருக்கிறது. அதேபோன்று ஒலுவில் துறைமுகத்திலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என சாத்திக்கூறு ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் துறைமுக அதிகாரசபை அதனை மேற்கொள்ள தவறியதாலே ஒலுவில் துறைமுகத்தில் அரிப்பு ஏற்பட காரணமாகும். இந்த உண்மை தெரியாமல் ஜனாதிபதி தெரிவித்த கருத்து எமக்கு மன வேதனை அளிக்கிறது என்றார்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை..!


✍️ எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………..


✅👉 கமு/கமு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று (09)பாடசாலையில் நடைபெற்றது.


வகுப்பாசிரியர்களான எஸ்.எம்.ஏ.றிபாய், 

ஏ.டப்ளியு.எப்.நிப்றா மற்றும் தேசிய கல்விக் கல்லூரிப் பயிலுனர் ஆசிரியர்களான என்.ஆர்.கீர்த்தனா லக்சி, என்.நஸ்றீனா மற்றும் பெற்றோர்கள் ஆகியோரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இம்மாதிரிச் சந்தையின் திறப்பு விழாவினை பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக்,பிரதி அதிபர் எம்.வை.எம்.சாதீக்,உதவி அதிபர் இஷட்.ரி.ஸியாம் ஆரம்பப்பிரிவின் பகுதித்தலைவி எச்.ஆமினா பேகம் மற்றும் ஏனைய பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


தரம் 03 ஆரம்ப பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும்,சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள்,என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.


குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,உணவுப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.


சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது : தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார். – உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றச்சாட்டு..!

சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது : தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார். – உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றச்சாட்டு..!


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது : தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார். – உறுப்பினர் சஹாப்தீன் நளீம் குற்றச்சாட்டு..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..


✅👉 சம்மாந்துறை பிரதேச சபையின் தற்போதைய நிர்வாகம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும், பொதுச் சுகாதாரம், திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹாப்தீன் நளீம் தெரிவித்துள்ளார்.


சம்மாந்துறையில் (09) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதேச சபை கடந்த ஒரு வருட காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் நிரந்தரமான அல்லது நீடித்த எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான பொறுப்புகளில் ஒன்றான திண்மக்கழிவு அகற்றும் சேவை தற்போது சம்மாந்துறையில் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும், “2018 முதல் 2023 வரை நாங்கள் உறுப்பினர்களாக இருந்த காலத்தில் திண்மக்கழிவு சேவை முறையாக முன்னெடுக்கப்பட்டது. சபை கலைக்கப்பட்ட பின்னரும் 2025 மே மாதம் வரை சேவை தொடர்ந்தது. ஆனால் தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து பல பகுதிகளில் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன,” ஊரைச் சுத்தப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊரையே குப்பைக் காடாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்துல் மஜீத் மையவாடி, பலாஹ் மஸ்ஜித் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இது மாணவர்கள், பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.


இந்த விவகாரம் தொடர்பில் 2025 செப்டம்பர் மாதத்திலும் பின்னர் மீண்டும் சபையில் எழுத்து மூலமாகவும் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், இருந்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். “சமூக அமைப்புகளின் உதவியுடன் நான் நேரடியாக அந்தப் பகுதியை ஓரளவு சுத்தம் செய்தேன். ஆனால் இது பிரதேச சபையின் பொறுப்பு. மக்கள் தினமும் என்னிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு சபை அமர்விலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். “சபையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அபிவிருத்திக்கான நிதி இல்லை என்ற காரணம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.


வீதிவிளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். “நகர்ப்புறங்களில் தேவைக்கு அதிகமாக மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில், விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தும் பாதைகளில் அடிப்படை ஒளிவசதியும் இல்லை,” என அவர் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச சபை தற்போது மக்களுக்கான சேவை நிறுவனமாக இல்லாமல், ஒரு அரசியல் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களை முன்னெடுக்கும் தளமாக மாற்றப்பட்டுள்ளது.“மக்களுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே சபை பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கான திட்டங்களோ, தொலைநோக்கு அபிவிருத்தி சிந்தனைகளோ இல்லை.


மீன் வியாபாரிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டிருந்தாலும், இன்றளவும் சந்தை முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும், மீன் விற்பனையாளர்கள் பிரதான வீதிகளில் சிரமத்துடன் வியாபாரம் செய்து வருகின்றனர். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கலந்து கொண்ட சம்மாந்துறை தவிசாளர், பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளை முன்வைக்கத் தவறியதுடன் “மற்ற உள்ளூராட்சி தலைவர்கள் தங்களது பிரதேசங்களின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளை முன்வைத்தனர். ஆனால் சம்மாந்துறை சார்பில் ஊழியர்களின் சம்பளத்திற்கான நிதி கோரப்பட்டது. இது சம்மாந்துறையின் மிக முக்கிய பிரச்சினை அல்ல. அதேவேளை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.


பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஜனநாயக முறையிலும் உள்ளூராட்சி சட்ட விதிகளின்படியும் நிறைவேற்றப்படவில்லை. “வரவு–செலவுத் திட்டத்தில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதுகூட உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியான பழிவாங்கல் இடம்பெற்று வருகிறது. மேலும், எதிர்க்கட்சியினர் வரவு–செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்தாலும், சம்மாந்துறை பிரதேச சபையில் அதற்கான மதிப்பு வழங்கப்படவில்லை 


இறுதியாக, சம்மாந்துறை மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதற்கு தற்போதைய நிர்வாகம் ஊடகங்கள் முன்னிலையில் பதிலளிக்க வேண்டும். “மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று வரை மக்களுக்காக என்ன செய்துள்ளனர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சம்மாந்துறை மக்களின் நலனையும் எதிர்கால அபிவிருத்தியையும் முன்னிறுத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது,” என அவர் தெரிவித்தார்.


🌎 www.mihrajnews.com



✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


Tuesday, June 9, 2026

ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல்..!

ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி நீச்சல் வரலாற்றில் புதிய மைல்கல்..!


✍️ நூருல் ஹுதா உமர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………


✅👉 ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




Monday, June 8, 2026

ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ரஹ்மத் பவுண்டேசனின் மனிதநேயக் கரம் – தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!


✅👉 ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….


✅👉 "மனிதர்களுக்கான சிறந்த சேவை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே" என்ற உயரிய சிந்தனையை நடைமுறைப்படுத்தி வரும் மனிதாபிமானி ரஹ்மத் மன்சூர் அவர்களின் மற்றுமொரு மனிதநேயச் செயற்பாடாக, மாளிகைக்காடு, சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.


சமீப காலமாக அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குடிநீர் வசதிக்காக பல சிரமங்களை எதிர்நோக்கிய குடும்பங்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


YWMA பேரவையின் அனுசரணையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இக்குழாய்க்கிணறுகள், பயனாளிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


மக்களின் அத்தியாவசியத் தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் இச்சேவை, அப்பிரதேச மக்களின் பாராட்டையும் நன்றியையும் பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.


மனிதாபிமானம், சமூகப் பொறுப்பு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ரஹ்மத் பவுண்டேசனின் பணிகள், சமூக மாற்றத்திற்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





சமகால அரசியல் சதுரங்கமும் ஹிஸ்புல்லாஹ் என்னும் அசைக்க முடியாத சக்தியும்: ஒரு விரிவான அரசியல் பகுப்பாய்வு..!

சமகால அரசியல் சதுரங்கமும் ஹிஸ்புல்லாஹ் என்னும் அசைக்க முடியாத சக்தியும்: ஒரு விரிவான அரசியல் பகுப்பாய்வு..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சமகால அரசியல் சதுரங்கமும் ஹிஸ்புல்லாஹ் என்னும் அசைக்க முடியாத சக்தியும்: ஒரு விரிவான அரசியல் பகுப்பாய்வு..!


✍️ எஸ்.கே 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇


✅👉 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஆளுமை

இலங்கை அரசியலில், குறிப்பாக கிழக்கு மாகாண மற்றும் சிறுபான்மையின அரசியலில் தசாப்தங்களாக தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாக விளங்குபவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ். அண்மையில் அவர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் எழுப்பிய குரல் மற்றும் அவருடைய கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவரது அரசியல் முதிர்ச்சியை கேலி செய்யும் நோக்கில் எதிரணியினரால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், உண்மையில் அவரது ஆழமான அரசியல் உத்திகளையும் தூரநோக்கையும் புரிந்து கொள்ளாததன் விளைவே ஆகும்.


1. எதிரணியினரின் நக்கல்: அரசியல் முதிர்ச்சியின்மையா, அச்சமா?


ஹிஸ்புல்லாஹ்வின் அண்மைக்கால நகர்வுகளை "முறைகேடானது" அல்லது "அரசியல் முதிர்ச்சியற்றது" என்று சமூக ஊடகங்களில் எதிரணியினர் நையாண்டி செய்து வருகின்றனர். ஆனால், அரசியல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது அவர்களின் அரசியல் பலவீனத்தையும் அச்சத்தையுமே காட்டுகிறது.

மரபுரீதியான, தேக்கமடைந்த அரசியல் பாணிகளுக்கு பழகிப்போன சில்லறை விமர்சகர்களால் ஹிஸ்புல்லாஹ்வின் அதிரடி மற்றும் யதார்த்த அரசியல் (Realpolitik) நகர்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை. சமகால அரசியல் சூழலில், ஒரு தலைவர் எவ்வாறு தனக்கான பேசுபொருளை (Agenda) தானே உருவாக்க வேண்டும் என்பதற்கு ஹிஸ்புல்லாஹ்வின் இந்த நகர்வு ஒரு சிறந்த உதாரணம். விமர்சிப்பவர்கள் தங்களை "அறிவாளிகள்" கான்பித்துக் கொள்ள முயன்றாலும், உண்மையில் அவர்கள் ஹிஸ்புல்லாஹ் உருவாக்கிய அரசியல் அலைக்குள் அறியாமலேயே சிக்கிக்கொண்ட முட்டாள்களாகவே அடையாளப்படுகிறார்கள்.


2. Gen Z தலைமுறையை கவரும் நவீன அரசியல் வியூகம்

இன்றைய அரசியல் களம் மாறிவிட்டது.


குறிப்பாக Gen Z (ஜென்-இசட்) என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினர் பாரம்பரிய, சலிப்பூட்டும் மேடைப் பேச்சுக்களை விரும்புவதில்லை. அவர்களுக்குத் தேவை துணிச்சல், தனித்துவமான ஆளுமை மற்றும் சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் (Viral) தன்மையுள்ள தலைவர்கள்.


• துணிச்சலான குரல்:


ஹிஸ்புல்லாஹ்வின் அண்மைக்கால அதிரடிப் போக்கு, புதிய தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

• டிஜிட்டல் ஆதிக்கம்: 


சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் கூட, அவரைப் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரமாகவே (PR) மாறுகிறது.

 

• அசைக்க முடியாத பிம்பம்:


எதற்கும் அஞ்சாமல், தனது தரப்பு நியாயத்தை ஆணித்தரமாகப் பேசும் அவரது பாணி, புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவரை ஒரு "Mass Leader" ஆக நிலைநிறுத்தியுள்ளது.


3. சர்வதேசத் தலைவர்களுடனான ஒப்பீடு: 


துருக்கியின் தையிப் எர்டோகன்

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பாணியை, சமகால சர்வதேச அரசியலின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) அவர்களின் அரசியல் நகர்வுகளுடன் ஒப்பிடலாம்.


• சவால்களை எதிர்கொள்ளல் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்களை தனது தனித்துவமான ஆளுமையால் முறியடித்தல், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பலத்த எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கடந்து அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர்.


• மரபுவழி ஊடகங்களைத் தாண்டி, நேரடியாக அடித்தட்டு மக்களுடனும் இளைஞர்களுடனும் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பவர், சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் மூலம் Gen Z தலைமுறை வரை தனது செல்வாக்கை 

விரிவுபடுத்தியவர்.


• பல்கலைக்கழகங்கள், சமூகக் கட்டமைப்புகள் மூலம் நீண்டகால சமூக மாற்றத்தை உருவாக்கியவர், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனங்களை உருவாக்கி, சமூகத்தின் எதிர்கால அடித்தளத்தை பலப்படுத்தியவர்.


எர்டோகனைப் போலவே, ஹிஸ்புல்லாஹ்வும் விமர்சனங்களை தனக்கு சாதகமான அரசியல் மூலதனமாக மாற்றுவதில் வல்லவர். எதிரிகள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வித்தையை அவர் நன்கு அறிவார்.


4. ஹிஸ்புல்லாஹ்வின் நகர்வுகள் ஏன் சரி?


அரசியலில் இறுதி வெற்றி என்பது மக்களின் ஆதரவிலும், அதிகாரத்தை தக்கவைப்பதிலுமே தங்கியுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வின் தற்போதைய நகர்வுகள் தற்காலிகமான விமர்சனங்களை உருவாக்கினாலும், அவை நீண்டகால அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டவை:


 1. பிராந்திய செல்வாக்கை உறுதிப்படுத்தல்:


கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் தனித்துவமான அடையாளத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதில்லை.


 2. விமர்சகர்களின் அறியாமை:


அவரை விமர்சிக்கும் சில்லறை அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவர்கள், அரசியல் சதுரங்கத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை கணிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். அவர்கள் வெறும் தற்காலிக சலசலப்புகளை மட்டுமே நம்பியிருக்கும் முட்டாள்கள் என்பதை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் சாணக்கியம் மீண்டும் நிரூபித்துள்ளது.


அசைக்க முடியாத பேரியக்கம்

விமர்சனங்கள் என்பவை ஆலவிருட்சத்தின் மீது வீசப்படும் கற்களைப் போன்றவை. கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் என்ற அரசியல் ஆளுமை, அத்தகைய கற்களால் வீழ்த்தப்பட முடியாத ஒரு அசைக்க முடியாத சக்தி. எதிரணியினரின் நையாண்டிகளும், சில்லறை விமர்சகர்களின் கூச்சல்களும் காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், புதிய தலைமுறையின் ஆதரவோடும், சர்வதேசத் தலைவர்களின் துணிச்சலோடும் ஹிஸ்புல்லாஹ் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகள், பிராந்திய அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை..!

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை..!


✅👉 ஒரு சாம்பியன் பட்டம், இரு ரன்னர்-அப் வெற்றிகள்; 7 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………


✅👉 கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (KM/KM.G.M.M.S) மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இப்போட்டியின் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஏ.மிஷால் உமைர் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதேவேளை, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.ஹஸிமா மர்யம் முதல் ரன்னர்-அப் இடத்தையும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.முஹம்மது ஹாஸிக் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மேலும், எம்.எச்.ஹஸிமா மர்யம் (தரம் 1), எம்.எச்.முஹம்மது ஹாஸிக் (தரம் 3), எம்.ஏ.ஏ.அபீக் அஹமட் (தரம் 2), எம்.எஸ்.யூசுப் ஐமான் (தரம் 2), எம்.ரீ.எம். மஹ்தி ஹசன் (தரம் 3), ஏ.மிஷால் உமைர் (தரம் 4), எம்.ஏ.கே. அஹமட் ஸைன் மஹ்தி (தரம் 5) ஆகிய ஏழு மாணவர்கள் மாகாண மட்ட செஸ் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.


இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவர்களின் வெற்றி, பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளித்த பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் யூ.எல். றின்ஸா பர்வின், பயிற்றுவிப்பாளர்களான இஸ்மாயில் அஸ்லம் சுஜா மற்றும் எம்.ஏ.ஏ.அதீப் ஆகியோருக்கும், மாணவர்களின் வெற்றிக்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




Saturday, June 6, 2026

ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்..!

ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………..


✅👉 “ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி” என்ற தொனிப்பொருளின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை கருவாட்டுக்கல்-03 கிராம சேவகர் பிரிவல் ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்பக் கூட்டத்தில், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.சி.எம்.நயீம், ஏ.எச்.எம்.காலித், வை.எல்.பசீர், மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினரான எம்.ரீ.எம்.லாபிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கட்சியின் புனர்நிர்மாணப் பயணத்தை சம்மாந்துறையில் இருந்து ஆரம்பிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் அமைப்பை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பலப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்..!

நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்..!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………….


✅👉 சட்டத் துறையில் தனது கல்வி மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பின் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வந்த சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், அண்மையில் நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளார். 


கௌரவ எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், எம்.எல்.எம். நசீர் மற்றும் சித்தி மர்லியா ஆகியோரின் புதல்வராவார். இவர் மாவனல்லை தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்து தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.


சட்டத் துறையில் உயர்ந்த இலக்குடன் பயணித்த அவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து வழக்கறிஞராகத் தகுதி பெற்றார். அதன் பின்னர் மாவனல்லை, கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் சம்மாந்துறை, அம்பாறை பிரதேசங்களிலும் பணியாற்றி சட்டத் துறையில் பெறுமதிமிக்க அனுபவங்களைப் பெற்றார்.


தற்போது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த அவர், தனது தொழில்முறைப் பணிகளுடன் கல்விப் பயணத்தையும் தொடர்ந்தார். அதன் பயனாக, ஐக்கிய இராச்சியத்தின் Buckinghamshire New University பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமானி (LL.M.) பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இவர் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கொண்டவராவார் 


இவர் சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி திருமதி யூ.எல். ஷிபானா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, சம்மாந்துறை சட்டத்தரணி சங்கத்தில் தனது சட்டப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். தற்போது நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளமை அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்விச் சாதனை மற்றும் தொழில்முறை நேர்மைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.


அவரது இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு சட்டத்தரணிகள், நீதித்துறை சார்ந்தவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திலிந்து நீதித்துறை அதிகாரியாக தெரிவான இரண்டாமவர் எனும் பெருமையை இவர் பெறுகிறார். 


சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தச் சாதனை, அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பயணிக்கும் போது உயரிய இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!

கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பாக ரஹ்மத் மன்சூருடன் முக்கிய சந்திப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………


✅👉 கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் புதிய கட்டிட அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை இன்று அவரது காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பின் போது, பள்ளிவாசலை நவீன வசதிகளுடன் கூடிய அழகிய கட்டிடமாக அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


 மேலும், கட்டிட நிர்மாணத் திட்டத்தின் வரைபடம் மற்றும் தேவைகள் அடங்கிய மகஜர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைப் பெற்றுக்கொண்ட அவர், திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து கேட்டறிந்ததுடன், பள்ளிவாசலின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பாகவும் தனது கவனத்தை செலுத்தினார்.


இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவருமான ஏ. எம். பஷீர் அவர்கள், பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


சமூகத்தின் ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வபிவிருத்தித் திட்டம், எதிர்காலத்தில் பள்ளிவாசலின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










உலக சுற்றாடல் தின நிகழ்வு..!

உலக சுற்றாடல் தின நிகழ்வு..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉  உலக சுற்றாடல் தின நிகழ்வு..!


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…….


✅👉  உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2026.06.05ம் திகதி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் கல்முனை  வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. M. S.  சஹுதுல் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் எமது பாடசாலையில் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு பொறுப்பான இணைப்பாளர்களான திரு. A.R. பைரோஸ் கான் திரு.H.M.M நிஸ்பான் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பாக வடிவமைத்து திறன் பட நடாத்தி வைத்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ  எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்