Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Friday, August 28, 2026

பின்தங்கிய குடும்பத்துக்கு புதிய வாழ்விடம்; OCD அமைப்பின் 16ஆவது வீடு கையளிப்பு…!

பின்தங்கிய குடும்பத்துக்கு புதிய வாழ்விடம்; OCD அமைப்பின் 16ஆவது வீடு கையளிப்பு…!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 பின்தங்கிய குடும்பத்துக்கு புதிய வாழ்விடம்; OCD அமைப்பின் 16ஆவது வீடு கையளிப்பு…!


✍️ மின்மினி மின்ஹா - சம்மாந்துறை செய்தியாளர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………….


✅👉 சம்மாந்துறையில் ‘யாவருக்கும் உறையுள்’ எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட 16ஆவது வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருமான அல் ஹாஜ் ஜ.எல்.எம். மாஹிர் மற்றும் OCD அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமானியும் சமூக சேவையாளருமான அஸ்மி யாசின் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


இதன்போது உரையாற்றிய அஸ்மி யாசின், பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமூக ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அவசியம் எனத் தெரிவித்தார். 


தனிநபர் முயற்சிகளைக் காட்டிலும் சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்ச்சியான மக்கள் நலப் பணிகளுக்கு வலுசேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வீடமைப்பு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேலும் பல மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். ஜிப்ரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எம்.ஏ. காதர், தவிசாளர் மாஹிரின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப்(ஆசிரியர்), வை.பீ.எம். ஜலீல், எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் உள்ளிட்டோரும், OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்க ளும், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






Thursday, August 27, 2026

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா…!

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா…!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா…!


✍️ நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….


✅👉 உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா இன்று (26) கல்முனை நகரில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வின் ஆரம்ப மற்றும் முடிவுரையை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் செயலாளர் முபாரிஸ் எம். ஹனீபா நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை தாங்கிய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையுரையாற்றினார்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், அஹ்லுல் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜலீல்(பாகவி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி), கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், நிகழ்வில் உலமாக்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது சர்வமதத் தலைவர்களின் சிறப்பு உரைகளும் இடம்பெற்றன. இன, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்ற இவ்வுரைகள் நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தன.


மீலாதுன் நபி பெருவிழாவின் சிறப்பு மார்க்க சொற்பொழிவை மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் நிகழ்த்தினார். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, பண்புகள், மனிதநேயம், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.


மேலும், குர்ஆன் மத்ரஸா மாணவரின் ஆங்கில உரை, முஸ்லிம் கலாசார நிகழ்வு, இஸ்லாமிய பைத் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் மார்க்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.


கல்முனை நகரில் பள்ளிவாசல் நிர்வாகம், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்வைக்கிய மீலாதுன் நபி பெருவிழா, சமூக நல்லிணக்கம், சமய ஒற்றுமை மற்றும் மக்களிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















அல்குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் வாழ்வையும் பின்பற்றி சமத்துவமும் நல்லிணக்கமும் வளர்ப்போம்

அல்குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் வாழ்வையும் பின்பற்றி சமத்துவமும் நல்லிணக்கமும் வளர்ப்போம்

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 அல்குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் வாழ்வையும் பின்பற்றி சமத்துவமும் நல்லிணக்கமும் வளர்ப்போம்


✅👉 மீலாத் தின செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர் ரஹ்மத் மன்சூர்…!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………………


✅👉 அல்குர்ஆனின் போதனைகளையும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயரிய வாழ்வியல் வழிகாட்டல்களையும் பின்பற்றி, சமத்துவம், சகோதரத்துவம், இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதே இன்றைய காலத்தின் அவசியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும்,ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத்தலைவரும், கல்முனை மாநகர சபை முன்னால் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தனது மீலாத் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


இன்றைய உலகில் இன, மத, மொழி வேறுபாடுகளால் பல்வேறு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன. இத்தகைய சூழலில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் காணப்படும் நீதி, மனிதநேயம், சகிப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


இலங்கை போன்ற பல இன, பல மத மக்கள் வாழும் நாட்டில், பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்த்து, அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்துவது எமது பொறுப்பாகும்.


யுத்தம், வன்முறை மற்றும் அநீதியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், மனித உயிரின் பெறுமதியையும் அமைதியையும் நீதியையும் வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் சிறந்த படிப்பினைகளைப் பெற வேண்டும்.


அன்னாரின் மீலாத் தினத்தில், வெறுப்பை விட அன்பையும், பிரிவினையை விட ஒற்றுமையையும், முரண்பாட்டை விட நல்லிணக்கத்தையும் முன்னிறுத்தி, அனைவரும் அமைதியுடனும் சமத்துவத்துடனும் வாழும் சமூகத்தை உருவாக்க உறுதி பூணுவோம்.


“நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை.”

(அல்குர்ஆன் – அல்-அன்பியா 21:107)


மீலாத் தின நல்வாழ்த்துக்கள்!


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்…!

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்…!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்…!


✍️ எஸ். சினீஸ் கான்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………


✅👉 உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


மனிதநேயம், சகோதரத்துவம், நீதி, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான வழிகாட்டியாகும்.


குறிப்பாக, பல்வேறு இனங்களும் மதங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.


நபி (ஸல்) அவர்கள் போதித்த மனிதநேயத்தையும், அயலவர் உரிமைகளையும், பிற சமூகங்களின் கண்ணியத்தையும் மதிக்கும் பண்பாட்டையும் நாம் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் மூலம், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.


இந்த புனித நாளில், இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மக்களிடையேயும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும், எமது தாய்நாட்டில் நிரந்தர அமைதியும் சுபீட்சமும் நிலவவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள்!


கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

(பாராளுமன்ற உறுப்பினர்)


www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

Tuesday, August 25, 2026

பெண்களின் தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்த ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு…!

பெண்களின் தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்த ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு…!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 பெண்களின் தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை வலுப்படுத்த ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு…!


✍️ நூறுல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………..


✅👉 ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் மாநாடு 2026, கட்சியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.


பெண்களின் உரிமைகள், சமூகப் பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாட்டில், விசேட அழைப்பாளர்களாக சட்டத்தரணி இர்ஃபானா இம்ரான் மற்றும் கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதன்போது பெண்களின் உரிமைகள், சமூகத்தில் பெண்களின் வகிபாகம், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவதன் அவசியம் தொடர்பில் இருவரும் பெறுமதியான கருத்துக்களையும் உரைகளையும் வழங்கினர்.


பெண்களின் தலைமைத்துவம், வலுவூட்டல் மற்றும் சமூகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, அமைதியானதும் நீதியானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியமும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


பெண்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, அவர்களை சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் மேலும் முன்னிலைப்படுத்துவதற்கான உறுதியுடன் ஐக்கிய சமாதானக் கூட்டணியின் மகளிர் சக்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் சந்திப்பும் நன்றி நவிலல் நிகழ்வும்…!

சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் சந்திப்பும் நன்றி நவிலல் நிகழ்வும்…!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் சந்திப்பும் நன்றி நவிலல் நிகழ்வும்…!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………….


✅👉 சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் அண்மையில் நடைபெற்ற இரு நாள் நுவரெலியா ஊடகச் சுற்றுப்பயணத்திற்கு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் “நன்றி நவிலலும் கௌரவ விருந்தும்” நிகழ்வு (22) சனிக்கிழமை ஒலுவில் ஓஷியன் கார்டனில் சிறப்பாக நடைபெற்றது.


சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா ஊடகச் சுற்றுப்பயணத்தின் வெற்றிக்கு முழுமையான ஆதரவையும் நிதி அனுசரணையையும் வழங்கியவர்கள் மற்றும் மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றிஸ்வான் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்காக சிறப்பு பகல் விருந்தும் வழங்கப்பட்டது.


நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், அமைப்பாளர் எம்.வை. அமீர், அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான முனை மருதவன் எம்.எச்.எம். இப்றாஹிம், சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எம். ஜெஸ்மின், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றிஸ்வான், சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை முகாமையாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல்.எம். றியாஸ், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்ஸ் தலைவர் ஏ.எல். அன்சார், சன்றைஸ் பணிப்பாளரும் தொழிலதிபருமான எச். அமானுல்லாஹ், ஸ்கை தமிழ் நெட்வேர்க்ஸ் நிறுவுனர் ஜே.எம். வாஸித்,எப். நியூஸ் பணிப்பாளர் பளீல் ஏ. மஜீத், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் விசேட அம்சமாக அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான முனை மருதவன் எம்.எச்.எம். இப்றாஹிம் அவர்களுக்கு தொழிலதிபர் எச். அமானுல்லாஹ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


ஊடகவியலாளர்களிடையேயான ஒற்றுமை, நல்லுறவு மற்றும் ஊடகப் பணிகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அனுசரணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுற்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில்…!

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில்…!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில்…!


✍️ நூருல் ஹுதா உமர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 கலாசார ஆடை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு உடனடியாக நேர்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இல்லை என்றால் அந்தக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்துள்ளார்.


அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி. நியாஸ் இம்மாத சபை அமர்வில் முன்வைத்த பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கட்சியினுடைய பிரதிச் செயலாளர் நாயகம். எங்களுடைய கட்சியும் இந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கிறது. அதைக்கூட தமிழ் முஸ்லிம் கட்சிகள் என்று சொல்ல முடியாது. தமிழ் பேசும் கட்சிகள் என்றே அழைக்கிறார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் தந்துள்ளேன்.


தமிழ், முஸ்லிம் ஆறு கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது எதற்காக? இந்த கல்முனை விடயம் நேரடியாக தமிழர்களிடமும் முஸ்லிம்களிடமும் சம்பந்தப்பட்ட விடயம். வேறு சிங்கள சமூகத்திற்கோ அல்லது சிங்கள அரசியல்வாதிக்கோ நேரடியாகத் தொடர்பில்லை. அவர்கள் அமைச்சர்கள், அரசாங்கம் என்பதை தவிர.


ஆகவே ஒரு பிரச்சினை எங்களுக்குள்ளே வருகின்றபோது, இவற்றை உடனடியாகத் தீர்ப்பதற்கு இந்தக் கூட்டமைப்பு ஏன் முனையவில்லை? இந்த கூட்டமைப்பு உடனடியாக செய்திருக்க வேண்டியது சுகாதார அமைச்சரையோ, ஜனாதிபதியையோ சந்தித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள், தமிழர்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். கலாச்சாரங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்களுடைய கலாச்சார ஆடையை அவரவர் அணியட்டும் என்ற செய்தியை அந்தச் சுகாதார அமைச்சருக்குத் தமிழ், முஸ்லிம் தலைவர்களாக ஒன்றிட்டுப் போய் சொல்லி இருந்தால் இன்று இந்தப் பிரச்சினை வந்திருக்காது.


ஆனால் பொதுநிலையில் இருக்கும் தமிழர்களுடைய வாக்கு போய்விடும் என்று பயப்படுகின்ற தமிழ் தலைவர்களோடு முஸ்லிம் தலைவர்களுக்கு கூட்டுத்தேவை இல்லை. அதேபோன்று கொதிநிலையில் இருக்கும் முஸ்லிம்களுடைய வாக்கு போய்விடும் என்று பயப்படுகின்ற, திராணி இல்லாத, முள்ளந்தண்டு இல்லாத முஸ்லிம்களுடைய கூட்டு தமிழ் தலைவர்களுக்குத் தேவையில்லை.


இந்தச் சந்தர்ப்பத்தில் களத்தில் இருக்கிற இனவாதம் தலைக்கு உச்சேறி இருக்கின்ற தமிழ் சகோதரர்களுடைய வாக்கு எங்களை விட்டுப் போய்விடும் என்று பயப்படுகின்ற சுமந்திரன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. சாணக்கியன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. அம்பாறையில் இருக்கின்ற கோடிஸ்வரன் ஆக இருந்தாலும் ஒன்றுமில்லை. அவர்களோடு கூட்டு முஸ்லிம் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் தேவையில்லை.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் வைத்தியசாலை, கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை (அஷ்ரப் ஞாபகார்த்த முஸ்லிம் வைத்தியசாலை)முஸ்லிம் வைத்தியசாலை. இப்படியா நாங்கள் செய்வது? அதையும் ஒரு இனவாதமாகப் பேசுகிறார்கள்.


கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை உருவாக்கப்பட்ட வரலாறு எல்லாருக்கும் தெரியும். எங்களுடைய பிரதேசத்தினுடைய பொது வைத்தியசாலையாக வந்திருக்க வேண்டிய வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தான். ஆனால், எப்போது அதற்கு மாற்றாக ஒரு வைத்தியசாலை தேவைப்பட்டது? மட்டுமில்லாது எப்போது எங்களுக்கு மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மாற்றாக ஒரு தென்கிழக்கு பல்கலைக்கழகம் தேவைப்பட்டது ?


எங்களுக்குச் சுதந்திரமான நடமாட்டம் செய்ய முடியவில்லை. கல்முனையில் இருக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள், கல்முனை கடற்கரை பள்ளிவாசலைத் தாண்டிச் செல்வதற்கு முடியும் என்று நினைக்கவில்லை. உயிர் பயம், நோயைக் குணப்படுத்த உயிரைப் பறிகொடுக்க என்ற காலங்களும் இருந்தது. அதனால் மாற்றுத் திட்டங்களைப் பற்றி யோசித்து அந்த வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்பட்டன. அதேபோன்று தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. அது தேவை நிமித்தமானது.


எங்களுக்குப் பயணம் செய்யக்கூட முடியாதிருந்த நிலைமை. கல்வியை தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள் கொழும்புக்குத்தான் மாற்றப்பட்டார்கள். பிறகு கிழக்கில் எங்களுக்குத் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. நாம் இப்போது இருக்கின்ற சமாதான சூழ்நிலையை வைத்துக்கொண்டு இப்போது பேச முடியாது. அப்போது இருந்த நிலைமை வேறு. ஆகவே கண்ணை மூடிக்கொண்டு இங்கே எல்லோரும் இனவாத சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது இனவாதிகளாக மாறிப் பேசுகின்ற நிலைமைக்கு மாற்றமாக, இதிலே அரசாங்கம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.


அரசின் தீர்மானம் அவர்களை இடமாற்றம் செய்வதுதான் என்றிருந்தால், இந்த அரசாங்கமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை தமிழ் வைத்தியசாலை என்றும், கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலையை முஸ்லிம் வைத்தியசாலை என்றும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமாகத்தான் எங்களால் கருத முடியும். இது மிகத் தவறானது. அதைச் செய்ய முடியாது. அதற்கு மாற்றாக அரசாங்கம் சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் சரியான தீர்மானத்தை மேற்கொள்கின்ற விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நேர்மையான தீர்மானம் எடுக்க வேண்டும்.


அந்த நேர்மையான தீர்மானம் கலாச்சார ஆடைகளை அணிவதற்கான இந்த நாட்டினுடைய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்ற உரிமையை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். அது தமிழர்களாக இருந்தாலும் சரி, சிங்களர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய அந்தச் சீருடைக்கு மேலாக மேலதிகமாக அவர்கள் தங்களுடைய கலாச்சார ஆடைகளை அணிவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்பதை பகிரங்கமாக அரசாங்கத்தின் மீது அழுத்தம் தர அவர்கள் தயாராக இல்லாவிட்டால், இந்த ஆறு கட்சிகளின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு தங்கள் தங்களுடைய வேலைகளை அவர்கள் பார்க்கட்டும் என்ற செய்தியை இந்த இடத்திலே நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.- என்றார்.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் கலந்துரையாடல்..!

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் கலந்துரையாடல்..!

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் கலந்துரையாடல்..!


✍️ எம்.என்.எம்.அப்ராஸ் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..


✅👉 சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் கலந்துரையாடல் சாய்ந்தமருதில் (23)இடம்பெற்றது.


சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன்(INTERNATIONAL HUMAN RIGHTS GLOBAL MISSION)அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர்.அமீர்கான் அவர்களின் வழிகாட்டலில் அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எல்.றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ.அப்ரோஸ்,எம்.பி.நூமைசா,

எஸ்.எப்.சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. 


இதன் போது அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.


மேலும் அம்பாரை மாவட்டத்தில் பொது மக்களின் சமூக நல சார் விடயங்களை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுத்து செல்லுதல்,கல்முனை பிரதேசத்தில் இரத்ததான முகாம்,சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிரமதானபணிகள் மேற்கொள்ளல் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்,நல்லிணக்க செயற்பாடுகள்,மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வேலைத் திட்டங்கள் என்பன இடம்பெற இதன் போது தீர்மானிக்கப்பட்டது .


சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் (International Human Rights Global Mission – IHRGM) அமைப்பின் பிரதி பணிப்பாளர்களான எம். எச்.எப்.சாஹானா பானு,எம்.எப்.எப்.அக்ஸா

இணைப்பாளர்களான ஜே.எப்.சுஜிமா,

எம்.ஆர்.எம்ரோசான்,எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம்,ஏ.எம்.எப். ரிபா,ஆர்.எம்.ரூமி,

ஐ.ஜாபீர்,அங்கத்தவரான செயின் நௌபல்

ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்