𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இன்று மதியம் பகலுணவுக்காக தனது தாய் வீட்டுக்கு சென்று பிற்பகல் 04.00 மணியளவில் நேயம் கிராமம் நோக்கி சகோதரியின் மோட்டார் சைக்கிளில் அவரது 10 வயது மனுடன் பின் ஆசனத்திலிருந்து பயணிக்கும் போது,தாமரைக்கேணி நாட்சந்தியில் வைத்து சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக பயணித்த பிக்கப் வாகனத்துடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே இவர் மரணமானதோடு, மற்றைய இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏறாவூர் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் படி, சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர், மரண விசாரணை மேற்கொண்டு உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
நாளை உடற்கூறு பரிசோதனை முடிவுற்றதும் பிரேதம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.








0 comments: