Sunday, October 26, 2025

இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இயற்கை சூழலுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் அவசியம் குறித்து உலக நாடுகள் அவதானம் செலுத்தி வருகின்றன.
பல தசாப்தங்களாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அப்படியானால், நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு மூலமாக நம் உடலை அது பாதிக்காது என்று எவ்வாறு கூற முடியும்? பிளாஸ்டிக் பாவனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது இன்னும் தீர்க்கக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தெளிவான தீர்வுகள் மிகக் குறைவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்தவகையில், இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை வலைய பாடசாலையான சது ஐல் அமீன் வித்தியாலயத்தில் கல்லூரி முதல்வர் கே.எல். கலந்தர் லெப்பை தலைமையில் இடம்பெறது.
இலங்கை சுற்றுச்சூழல் அதிகார சபையினுடைய .பிவிருத்தி உத்தியோகத்தர் பை.பி. ஜெமீனா அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் விஷேட உரை நிகழ்த்தியதோடு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் அவர்களினால் மாணவர்களுக்கான ஆறுப்படுத்தல் அமர்வும் இடம்பெற்றது.
பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எப்.சப்றானா, பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. பௌமியா ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நிக்ம்ழ்வின் பிரதான வளவாளராக ம்பாரை மாவட்ட சுற்றுச்சூழல் அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என். றாஜன்
கலந்துசிறப்பித்ததுடன் விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்திவைத்தார்.
2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்பதில் கவனம் செலுத்துகிறது.
ஐ.நா. அமைப்பின் முன்னணி சுற்றுச்சூழல் அமைப்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையில், இந்த ஆண்டு #BeatPlasticPollution என்ற தலைப்பில் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தோற்கடிக்க, தீர்வுகளைச் செயல்படுத்தல், அதற்காக வாதிட, உலகெங்கிலும் உள்ள மக்களை அணிதிரட்டுகிறது.
இந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்த வளர்ந்து வரும் அறிவியல் ஆதாரங்களை முதன்மைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றும் பிளாஸ்டிக்கின் 5 கொள்கைகளான நிராகரித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மீள்சுழற்சி செய்தல் மற்றும் மறுபரிசீலனை செய்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 11 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வெளியேற்றப்படுகின்றன, மேலும் விவசாயப் பொருட்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் கழிவுகள் மற்றும் நிலப்பரப்புகளில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக் மண்ணில் சேர்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் வருடாந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள் 300 பில்லியன் அமெரிக்க மொலர்கள் முதல் 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது .
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: