𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கீரின் பீல்ட் தொடர் மாடி மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கல்முனை ரோயல் வித்தியாலத்தில் இன்று (07)அதிகாலை காட்டு யானைகள் உள் நுழைந்து பாடசாலை வளாகத்தில் நடாப்பட்டிருந்த மரங்கள் மற்றும் பூச்சாடிகள் சிலவற்றையும் குடிநீர் நீர் இணைப்பு,நீர் தாங்கி குளாய் என்பவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது மேலும் இரவு வேளைகளில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள வயல் வெளிகளில் கடந்த சில நாட்களாக சஞ்சரித்து காணப்படும் நிலையில் யானைகள் குறித்த அண்மை காலங்ளில் குடியிருப்பு பகுதியில் வந்து சேதம் விளைவித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் குறித்த குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தரும் நிலையில் உள்ளதால் இதனால் மிகவும் அச்ச நிலையில் தாம் வசித்து வருவதாக பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய நடவடக்கை எடுக்குமாறு பாடசாலை சமுகம் ,பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







0 comments: