Saturday, October 11, 2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்தீனின் தலைமையில். கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சுஹைர் அத்தாசின் வழிநடத்தலில் இளைஞர் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறப்பு பேச்சாளராக புத்தளம் மாவட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்வியின் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டுதல், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், இளைஞர்களை ஆபத்தான போதைப் பொருள்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன வேலைத் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த இவ்வமைப்பு திடசங்கட்பம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-- ஊடகப்பிரிவு

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: