𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.
இதேவேளை அன்றைய தினம் உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இவ்வருடம்
உலக சிறுவர் தினமானது "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் கருப்பொருளின் கீழ் செப்டம்பர் 25 ம் திகதி முதல் ஒக்டோபர் 01 ம் திகதி வரை சிறுவர் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடணம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.
இத்தொடரில் இறக்காமம் அபாபீல் முன்பள்ளி பாடசாலையின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திரமதி ஏ.கே. றொஷின்தாஜ்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக கௌரவ
பிரதேச சபை உறுப்பினர் எம். சஜா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வை.பி. யஷோதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கிராம சேவை உத்தியோகத்தர், பொருளாதர அபிவிருத்தி உத்தியோகத்தர், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அபிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முன்பள்ளி மாணவர்களின் வர்ண விழா, குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான கலை நிகழ்வுகள், பரிசளிப்புகள் என சிறுவர்களை மகிழ்வூட்டும் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.






0 comments: