𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்
Nurture with love to lead the world
எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தின நிகழ்வுகள் மேற்படி பாடசாலையின் அதிபர் எம்.ஏ. சலாம் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கு சின்னம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு கிரீன் பீல்ட் கிராமத்தின் ஊடாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றதுடன் மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்முனை முகையதியின் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நம்பிக்கையாளர், ஓய்வு பெற்ற மருந்தகர் ஏ எல் எம் ஹனிபா ஹாஜியார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பாடசாலையின் மேம்பாட்டு குழு அங்கத்தவரான கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிநிதியான எம் ஏ எம் ஹபில் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எம்.ஐ.ஜுமானா பாடசாலையின் ஆசிரியர்களான எம்.ஐ,எம். ரஸீன், எம்.ரீ.பிர்னாஸ், ஜே. நிலுபா,
எம்.ஐ. ஹில்மியா, எஸ்.பி. கபீறா, எம்.ஐ. யாஸ்மின் இஸ்ஸத், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம். இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி மாணவர்களை கௌரவித்தனர்.








0 comments: