𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாடசாலையின் அதிபர் திரு .ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.
மேலும் முதலாவது கட்டமாக மாணவர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலம் கல்முனை வலயக் கல்வி பணிமனையில் ஆரம்பித்து கல்முனையின் பிரதான வீதியின் ஊடாக சென்று மீண்டும் கல்முனை சந்தை வழி ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.
இதன்போது சிறுவர்களின் உரிமைகள், அவர்களது பாதுகாப்பு, கல்வி போன்ற செயற்பாடுகள் தொடர்பான பதாகைகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த ஊர்வலமானது சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒரு கண்டனமாகவும் அமையப்பெற்றது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குளிர் பானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் சிறுவதினத்தின் இரண்டாம் கட்டமான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களை மகிழ்வூட்டும் விதமாக பாடசாலை மைதான வளாகத்தில் நடை பெற்றது.
இந்த சிறுவர் தின விளையாட்டு போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் யூ.எல். எம். சாஜித் அவர்களும்
கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பீ.எம்.என்.சுவர்ணகாந்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர் குழாத்தினார் இனிப்பு பண்டங்கள் வழங்கி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
அத்தோடு இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.எம். ரீ.ஏ.முனாப் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.















0 comments: