Tuesday, October 7, 2025

வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் பிரமாண்டமான “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் பிரமாண்டமான “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” சிறுவர் தினக்கொண்டாட்டம்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் (Women’s Corps – Sri Lanka) ஏற்பாட்டில் “கிட்ஸ் ஃபன் பெஸ்ட்” எனும் சிறுவர் தினக் கொண்டாட்டம் (01) புதன்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கலாச்சார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் விமர்சியாக நடைபெற்றது.
சர்வதேச சிறுவர் தினம் “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” எனும் தொனிப்பொருளில இந்த விழா இடம்பெற்றது.
வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி ஏ.பாத்திமா றிகாஸா ஷர்பீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முகம்மது ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக், கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல். பாத்திமா றிம்ஸியா, தொழிலதிபரும் கலைஞருமான ஏ.எல். ஆப்தீன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர். ரொஸ்மி, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், அக்கரைப்பற்று நிலாமியா ஜூனியர் பாடசாலையின் ஆசிரியை ஏ.எல். பாத்திமா நுஸ்ஹா, ஓய்வுபெற்ற ஆசிரியை மௌலவியா எம்.எஸ்.எஸ். நிஸ்ரினா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் கதாநாயகர்களான சிறுவர்கள் அதிதிகளால் சொக்லேட் மற்றும் பலூன் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
இச்சிறுவர் தின நிகழ்வில் சாய்ந்தமருதிலுள்ள 8 பாலர் பாடசாலைகளான எம்.எஸ். காரியப்பர் பாலர் பாடசாலை, பிர்லியன்ட் பாலர் பாடசாலை, லீட்தவே பாலர் பாடசாலை, மழ்ஹருஸ் ஷம்ஸ் பாலர் பாடசாலை, அல்- ஜலால் பாலர் பாடசாலை, கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை, லீட்டில் ரோஸ் பாலர் பாடசாலை, யுனிவர்சல் பாலர் பாடசாலை என்பன ஒன்றிணைந்து நூற்றுக் கணக்கான சிறுவர்களின் பங்குபற்றலுடன் முதற்தடவையாக இவ்வாறானதொரு பிரமாண்டமான நிகழ்வை சாய்ந்தமருதில் நடாத்தி வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பு வரலாறு படைத்துள்ளது.
இந்நிகழ்வில் சிறுவர்களின் சிரிப்பு, படைப்பாற்றல், மகிழ்ச்சி ஆகியவை மையமாகக் கொண்டு விளையாட்டுகள், நடனங்கள், வினோத உடை, அணி வகுப்புகள், கதைக்கூறல், பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் நினைவுப் சின்னங்கள்@ மற்றும் சான்றிதழ்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பின் தலைவி ஏ.பாத்திமா றிகாஸா ஷர்பீன் நிகழ்வின் பிரதம அதிதி, விஷேட அதிதி ஆகியோருக்கு நினைவுப் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: