𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


உலக சிறுவர் தினம், அனைத்து குழந்தைகளின் உரிமைகள், சமத்துவம், கல்வி, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உலகளவில் வலியுறுத்தும் நாளாகும்.
ஒவ்வொரு குழந்தையும் அன்பால், மரியாதையால், மற்றும் சமத்துவத்தால் வளர வேண்டும்” என்பது இந்நாளின் முக்கிய செய்தியாகும்.
எதிர்கால தலைவர்களாக வளரும் சிறுவர்களின் கனவுகளையும் திறமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கெல்லாம் உள்ளது.
சிறுவர்களின் மகிழ்ச்சி, நலன் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக எப்போதும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தை வழிநடாத்தும் தலைவர்கள் என்பதனை வலியுறுத்தி இவ்வருட சிறுவர் தினம் "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவானது, இறக்காமம் ஒறாபி பாஷா வித்தியாலயத்துடன் இணைந்து உலக சிறுவர் தின நிகழ்வுகளை கொண்டாடியது.
இறக்காமம் ஒறாபி பாஷா வித்தியாலய
பாடசாலை அதிபர் யூ.எல். தாஹிர் அவர்களின் தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஷின்தாஜ்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி எம்.ஐ. பஸீனா, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வை.பி. யஷோதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அபிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி சவர்னா உட்பட கல்லூரின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவகளின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றதுடன் பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு சிறுவர் தின அன்பளிப்புக்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.












0 comments: