Tuesday, October 7, 2025

ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன் : பல கட்சி பிரமுகர்களும் பங்கெடுப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ஆசிரியர் தினத்தில் கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய மீஸான் பௌண்டஷன் : பல கட்சி பிரமுகர்களும் பங்கெடுப்பு..!
✍️ மாளிகைகாடு செய்தியாளர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கடந்த 20 வருடங்களாக சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்து வரும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அதன் தொடர்ச்சியாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிப்பும், சாதாரண தர மாணவிகளுக்கான பாராட்டும் நிகழ்வான "Constellations Awards - 2025" கௌரவிப்பு நிகழ்வை ஆசிரியர் தினமான (2025.10.06) மாளிகைக்காடு வாவா றோயளி மண்டபத்தில் கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் அவர்களின் நெறிப்படுத்தலில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். நூருல் ஹுதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.ஏ. அப்துல் ரஸாக் (ஜவாத்), கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் தின சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும் இந்நிகழ்வில் அல் அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எம்.எஸ். ரிசானா, உதவி அதிபர்களான திருமதி ஏ.பி.என். ஜஸீல், எம்.எச்.ஐ. இஸ்ஸத், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் கடந்த சாதாரண தர பரீட்சையில் சிறப்பு சித்தியெய்திய மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: