𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின், இலங்கை பெண்கள் பணியகமானது
"அனர்த்த அவசர கால நிலைமையின் போது உளநலத்திற்கான அணுகல்" எனும் தொனிப்பொருளின் கீழ்
இவ்வவருட உலக உளநல தின நிகழ்வுகள் நடைபெற்று வருவதுடன், அதனை சிறப்பிக்கும் வகையில் ஒக்டோபர் 10 ம் திகதி முதல் உலக உளநல வராமாக பிரகடணம் செய்து உளநல ஆரோக்கியம் தொடர்பில் மாணவர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறைச்சாலைகள் என பல்வேறு தரப்பினருக்குமான வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது.
இத்தொடரில், உலக உளநல வாரத்தினை முன்னிட்டு அம்பாரை மாவட்ட சிறப்பு நிகழ்வாக நடமாடும் உளநல சிகிச்சை முகாம் இன்று 2025.10.15 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் உளநல சிகிச்சை முகாமை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டதுடன் தம்சார்ந்த உள நெருக்கீடுகள், பிரச்சினைகள், குடும்ப, சமூக, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதர பிரச்சினைகள், குறிப்பாக சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் உளவள ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்தல் சேவைகளையும் உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொண்டனர்.
இவ் உளநல சிகிச்சை முகாமில் பெண்கள் பணியகத்தின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உளவளத்துணை உத்தியோகத்தர்களும் பங்கேற்றதுடன் சேவைநாடிகளுக்கு தேவையான உளச் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி வைத்தனர்.
மேலும் மேற்படி நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.














0 comments: