𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் நீண்டகாலமாக மின்சார இணைப்பு இன்றி வாழ்ந்த ஒரு தேவையுள்ள குடும்பத்தின் வீடுகள், இன்று ஒளியில் மிளிர்கிறது.
கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு என பல துன்பங்களைச் சந்தித்த அந்தக் குடும்பத்திற்காக, ரஹ்மத் பவுண்டேசன் “ஒளியின் வாயிலாக புதிய வாழ்வை” உருவாக்கி வழங்கியுள்ளது.
இந் நிகழ்வு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் இன்று (15) வெற்றிகரமாக கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயனாளிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.







0 comments: