இத்தளபாட கையளிப்பு நிகழ்வு 2025/10/11 பாடசாலையில் இடம்பெற்றது.மேலும் இதன் ஏற்பாட்டாளர்களான AH.Fowzul Ameen, MMM.Amsath, ACA.Mazahir, A.Sathar Moulana ஆகியோரின் மூலம் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் SM.Nimsath (moulavi) ஏனைய உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது வழங்கப்பட்ட தள பாடங்கள் மிகப் பெறுமதியானதாகவும் தரமானதாகவும் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலை சமூகத்தினால் இத்தளபாடத் தொகுதியை அன்பளிப்புச் செய்த சட்டத்தரணி SLM.Halith அவர்களுக்கும் அதன் ஏற்பாட்டாளர்களாக செயற்பட்ட AH.Fowzul Ameen, MMM.Amsath, ACA.Mazahir, A.Sathar Moulama அவர்களுக்கும் பாடசாலை மட்டத்தில் செயற்பட்ட பழைய மாணவர் சங்க செயலாளர் UL..Haja அவர்களுக்கும் அதன் அங்கத்தவர்களான UL.Riyal , SN.Hasmy ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும் உறுதியளிக்கப்பட்டது.











0 comments: