2025.10.13 திங்கட் கிழமை பாடசாலை அதிபர் திரு ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்காலை ஆராதனை சிங்கள மொழிக்குப் பொறுப்பான ஆசிரியை திருமதி. ஏ.பீ .கைஸ் அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் அனைத்து நிகழ்வுகளும் சிங்கள மொழியிலேயே நடைபெற்றன.
மேலும் நிகழ்வின் போது பாடசாலை ஒழுக்காற்று குழுவினரால் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னங்களும், வெளிச்செல்லும் அனுமதி அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு அட்டாளைச்சேனை, தாளங்குடா கல்வியியற் கல்லூரிகளில் இருந்து கட்டுறுப் பயிலுனர்களாக வருகைதந்த ஒன்பது ஆசிரிய மாணவர்களும் பாடசாலையின் அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களினால் வரவேற்கப்பட்டு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.









0 comments: