𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் பேரிடரின் போது தமது உயிரைப் பணயம் வைத்து, உயிராபத்திலுள்ள மக்களைக் காப்பாற்றிய அல்லது காப்பாற்ற முனைந்த வீரமானிடர்களை பாராட்டும் விதமாக கடந்த 2024.11.26 அன்று காரைதீவு மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் 13 பேருடன் பயணித்த போது கவிழ்ந்த உழவு இயந்திரத்திலிருந்து அவர்களை மீட்க போராடியமைக்காக கிழக்கு பிராத்தியத்தில் முன்னோடி சமூக சேவை அமைப்புக்களாக திகழும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல்வள மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினர், காரைதீவு ராவனா அமைப்பினர் ஆகியோர் வீரமானிடர் விருது பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் வீர செயலுக்கான மன்றத்தின் இந்த விருது வழங்கும் விழா 28 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவ ரூபன், அனர்த்த நிவாரண சேவை காரைதீவு பிரதேச உத்தியோகத்தர் எம்.ஐ.எச். சர்பின், பொதுமக்கள் வீர செயலுக்கான மன்ற உறுப்பினர்கள், மத போதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





0 comments: