Saturday, October 11, 2025

கல்முனை சமாதான பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு..! பிரதம அதிதி திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்...

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை சமாதான பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு..!
பிரதம அதிதி திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்
முஹம்மது அஸ்லம்...
✍️ சர்ஜுன் லாபீர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 "உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கல்முனை சமாதான முன்பள்ளி பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று(11) காலை பாலர் பாடசாலை வளாகத்தில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
சமாதான பாலர் பாடசாலை அதிபர் எம் எச் ஹிஜ்ரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும்,பொருளியல் துறை கலாநிதியுமான ஏ.எல் முகம்மது அஸ்லம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம் அனீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் அஸ்-ஸம்ஸ் சமூக சேவைகள் அமைப்பின் ஆலோசகருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (LLB)ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் மத்தியில் வியாபார நடவடிக்கைகளை நடைமுறை ரீதியாக அறிந்து கொள்வதற்காக வேண்டி இந்த சிறுவர் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: