Friday, September 12, 2025

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 நமது சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம் நியாஸ் தலைமையில் இரண்டாவது நிகழ்வு, நேற்று (2) கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, சமூக முன்னேற்றத்தில் தங்களது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த மர்ஹூம் சேர் ராசிக் பரீத், மர்ஹூம் எச்.எஸ். இஸ்மாஈல், மற்றும் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் புத்திஜீவிகள், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்தகைய நிகழ்வுகள் நம் அடையாளத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாத்து, வருங்கால தலைமுறைக்கு வழி காட்டும் ஒரு முக்கிய மேடையாகவும் அமைகின்றன.
-- ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: