Tuesday, September 2, 2025

சுற்றுலாத்துறையை மேம்படுத்த; புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சுற்றுலாத்துறையை மேம்படுத்த; புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (31), அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பார்வையிட்டபோதே இதனை தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான தேவையான வசதிகளை உருவாக்கும் நோக்கில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது காத்தான்குடி பிரதேசத்திற்கு ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ் அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படுவதோடு, வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையுமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
– ஊடகப்பிரிவு
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: