

கல்முனையில் 1
500வது மீலாதுன் நபி (ஸல்) பெருவிழா முன்னிட்டு – கந்தூரிற்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


மனித நேயச் சேவையில் முன்னோடி பங்களிப்புகளை வழங்கி வரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அணுசரணையில், 1500வது மீலாதுன் நபி (ஸல்) பெருவிழா முன்னிட்டு கந்தூரிற்கான அரிசி வழங்கும் சிறப்புவிழா இன்று மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்புத் தாயார் சுஹாரா மேடம் அவர்கள் தனது பொற்கரங்களால் அரிசி வழங்கி வைத்து, விழாவை இன்னும் சிறப்புமிக்கதாக்கினார்.
இவ்விழாவை உலமாக்கள், ஊர்முக்கியஸ்தர்கள், ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் தங்களது பங்கேற்பால் அலங்கரித்தனர்.
மீலாதுன் நபி (ஸல்) பெருவிழாவின் ஆன்மீகச் செய்தியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூக ஒற்றுமையையும் சேவைச் சிந்தனையையும் வெளிப்படுத்திய நிகழ்வாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: