𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இக்கலந்துரையாடலில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்று, மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தல், தேவையான கட்டிட வசதிகள், வகுப்பறைகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், பள்ளிவாசலின் நீண்டகால குறைபாடுகள், சமூக நலத் திட்டங்கள்
போன்ற விடயங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ரஹ்மத் மன்சூர் அவர்கள்,
“கல்வி, சமூகம், மதம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் ஒரு சமூகத்தின் வளர்ச்சி உறுதி பெறும். குறைபாடுகளை நீக்க அரசும் தனியார் துறையும் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் அடிப்படையில் பாடசாலை மேம்பாட்டு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள், பள்ளிவாசல் முன்னேற்ற முயற்சிகள், சமூக நலத்திட்டங்கள்
விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு, மருதமுனை பிரதேசத்தில் கல்வி மற்றும் மத சேவைகளின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையைத் திறக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.













0 comments: