𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் WA. கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் RM. சிறிவர்த்தன, பிரதேச செயலாளர் TMM அன்சார், உதவி பணிப்பாளர் A .அமீர், ஜௌபர் (ADP) பிரதேச செயலகம் கல்முனை,பொலிஸ் அதிகாரி AL. வாஹிட் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், கல்முனை பிரதேசத்தில் இயங்கும் அனைத்து இளைஞர் கழகங்களின் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்று, புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
நிகழ்வின் போதான உரையாற்றல்களில், இந்நாட்டில் இளைஞர்களுக்கான சந்தர்ப்பங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் சமூக ஈடுபாடுகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான கல்முனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது.
*தலைவர் – NM. அப்ரின்
*உப தலைவர் – IM.நஸ்ஹான்
*உப செயலாளர் – A. அல் பர்தான்
*பொருளாளர் – RM.சஹித்
*அமைப்பாளர் – PM.பயாஸ்
*உப அமைப்பாளர் – MH.மல்ஹிபாத்
*ஊடகம் - HK. ஹஸீனூல் கமாஸ்.
மேலும் நிர்வாக குழுவின் ஏனைய உறுப்பினர்களும், அனைவரின் ஒருமனப்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



















0 comments: