

மர்ஹூம் ஏ.ஆர். ம
ன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில், அவரது தந்தையார் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் மறுமை வாழ்விற்காக தூஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று (28) மதியம், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
மனமுருகலுடனும், இஸ்லாமிய அன்பும் நிரம்பியபடி நடைபெற்ற இந்த நிகழ்வில், மறைவுற்றோருக்காக அல்-குர்ஆன் பாராயணம் மற்றும் சிறப்பு தூஆ பிரார்த்தனை நடைபெற்றது. இதனுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
இந்த நினைவுகூரல் நிகழ்வில், கனடாவிலிருந்து வருகைதந்த சகோதரர் ஜெஸ்லி ஆதம்பாபா, உலமாக்கள், கலாசாலையின் மாணவர்கள், மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மர்ஹூமை துஆவுடன் நினைவுகூர்ந்தனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: