𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பள்ளிவாசலில் வுழு செய்வதற்கான நீர்தொகுதி தொடர்பான குறைபாடுகள் நீண்டகாலமாக நிலவி வந்திருந்த நிலையில், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ரஹ்மத் சமூக சேவை அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கிணங்க, நவீன வசதிகளுடன் கூடிய நீர்தொகுதி பூர்த்தி செய்யப்பட்டு, அது ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகர் மற்றும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்களால் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த உயரிய பணிக்கான அனுசரணையை வழங்கிய YWMA பேரவைக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் பகுதி மக்கள் பங்கேற்று, அமைப்பின் சமூகப்பணியை பாராட்டினர்.
ரஹ்மத் மன்சூர் அவர்கள், “சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் சேவைகள் எப்போதும் முன்னுரிமை பெறும். பள்ளிவாசல்கள் என்பது மக்கள் ஒன்றிணையும் புண்ணியத் தலங்கள். இங்கு காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பது மிகப் பெரிய நன்மை பயக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இந்த சேவை, ஒலுவில் முஸ்லிம் சமூக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, நீண்டகால தேவைக்கான நிறைவேற்றமாக அமைந்துள்ளது.













0 comments: