𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய அவர், மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கும், கல்லூரியின் நீண்டகால தேவைகள் மற்றும் குறைபாடுகளுக்குமான தீர்வுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்தார். இதன்போது, கல்லூரி நிர்வாகத்தினரால் தயார் செய்யப்பட்ட மகஜர், ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும், கல்லூரியின் வளர்ச்சி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், விருந்தினர் வரவு பதிவேட்டிலும் ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது வருகையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயற்பட்டு வரும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் இவ்விஜயமும், ஸஹ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் முன்னேற்றப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.









0 comments: