𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


சவூதி அரேபியா, தனது Vision 2030 எனும் தூர நோக்குத் திட்டத்தின் கீழ் பல்துறை முன்னேற்றங்களை அடைந்து வரும் முன்னோடி நாடாக திகழ்கிறது. சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பல மாற்றங்களை இது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, இவ்வருடம் ஒக்டோபர் 27 முதல் 30 வரை, ரியாத்தில் உள்ள Exhibition and Convention Center-இல் 8வது Global Health Exhibition நடைபெறயிருக்கிறது.
“Invest in Health” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாபெரும் கண்காட்சி, உலகளாவிய சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்கள், உலகத் தர மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் துறைகளையும் ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் சிறப்பான வாய்ப்பு இதுவாகும்.
இந்தக் கண்காட்சியில், டெலிமெடிசின், டிஜிட்டல் ஹெல்த், தடுப்பு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சிகிச்சை முறைகள், மருந்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய முன்னேற்றங்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட உள்ளன. உலக மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தீர்வுகள் இங்கே உருவாகும்.
இந்நிகழ்வு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மருத்துவ முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதன் மூலம், சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெறும் இலக்கிற்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.
இத்தகைய முயற்சிகள், மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சவூதி அரசின் வினைத்திறனை பிரதிபலிக்கின்றன. கட்டமைப்புப் புரட்சி, அறிவியல் முன்னேற்றம், மற்றும் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் மேன்மைதான், இன்று சவூதி அரேபியாவை உலக சுகாதார மேடையில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.




0 comments: