🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஜனாஸா கடமைகளுக்கென பிரத்தியேக உலமா நியமனம்: கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முக்கிய அறிவித்தல்…!
✍️ யு.எல்.அலி.ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………
✅👉 கல்முனை பிரதேச மக்களின் ஜனாஸா தொடர்பான மார்க்கக் கடமைகளை முறையாகவும், நேர்த்தியாகவும், இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் நிறைவேற்றும் நோக்கில், தகுதியும் அனுபவமும் கொண்ட உலமா ஒருவரை ஜனாஸா மற்றும் அதனுடன் தொடர்புடைய மார்க்க விவகாரங்களுக்கான பொறுப்பாளராக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நியமித்துள்ளது.
அதற்கமைய கண்ணியத்திற்குரிய மௌலவி எம். எச். எம். அஸீஸ் மன்பயீ அவர்கள் கல்முனை பிரதேச மக்களுக்கு ஜனாஸா தொடர்பான சேவைகளை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் மற்றும் அவருக்கான கடமைகள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தில், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் 15.11.2026ம் இடம்பெற்றது.
கடந்த பல தசாப்தங்களாக காலஞ்சென்ற “மைனாப் பழம்” என அழைக்கப்படும் மர்ஹூம் சாஹுல் ஹமீது அவர்கள் ஜனாஸா தொடர்பான பணிகளுக்காக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினால் நியமனம் செய்யப்பட்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்தார்.
அன்னாரின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டிருந்த சேவை இடைவெளியை நிரப்புவதுடன் ஜனாஸா கடமைகளை தொடர்ச்சியாகவும், முறையாகவும், மார்க்க ஷரீஆ வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாஸா கடமைகளை நேர்த்தியாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றுவதற்குத் தேவையான மார்க்க அறிவு, அனுபவம் மற்றும் ஆற்றல் கொண்ட உலமா ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற நம்பிக்கையாளர் சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாஸா பொறுப்பாளரின் முக்கிய கடமைகள்
1. ஜனாஸா நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் – மரணச் செய்தி கிடைத்தவுடன் ஜனாஸா தொடர்பாக குடும்பத்தினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
2. மையித்தைக் குளிப்பாட்டுதல் – இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்பாடுகளைச் செய்தல்.
3. கபனிடுதல் – உரிய மார்க்க ஒழுங்குகளின்படி கபனிடுதல்.
4. ஜனாஸாத் தொழுகை நடத்துதல் – தேவையான சந்தர்ப்பங்களில் ஜனாஸாத் தொழுகையை முன்னின்று நடத்துதல்.
5. நல்லடக்க வழிகாட்டல் – நல்லடக்க நடவடிக்கைகளில் பங்கேற்று உரிய துஆ மற்றும் மார்க்க அறிவுரைகளை வழங்குதல்.
6. குடும்பத்தினருக்கு மார்க்க வழிகாட்டல் – ஜனாஸா தொடர்பான மார்க்க விடயங்களில் தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
7. குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ – மரண வீடுகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுதல், துஆ மஜ்லிஸ்களில் பங்கேற்பு.
8. நோயாளிகளுக்கான துஆ – அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்காகப் பிரார்த்தனை செய்தல்.
9. மார்க்க ஆலோசனை மற்றும் வழிகாட்டல் – பொதுமக்களின் தேவைக்கேற்ப மார்க்க ஆலோசனைகளை வழங்குதல்.
10. துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஆறுதல் – மரண வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆன்மீக ஆதரவு வழங்குதல்.
11. 24 மணி நேர அவசரத் தயார்நிலை – ஜனாஸா தொடர்பான அவசர அழைப்புகளுக்கு இயன்றவரை தாமதமின்றி பதிலளித்தல்.
ஊர் ஜமாஅத்தார்களின் கவனத்திற்கு!
கல்முனை பிரதேச ஜமாஅத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜனாஸா தொடர்பான மேற்குறிப்பிட்ட தேவைகளுக்காக, கண்ணியத்திற்குரிய மௌலவி எம். எச். எம். அஸீஸ் மன்பயீ அவர்களை 📞 075 456 3744 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு, இச்சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.*
ஜனாஸா என்பது ஒரு குடும்பத்தின் துயரமான தருணம் மட்டுமல்ல; அது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். அந்தக் கடமையை மார்க்க ஒழுங்குகளுடன், கண்ணியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதற்கான கல்முனை தாய்ப் பள்ளிவாசலின் இம்முயற்சியிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
-நம்பிக்கையாளர் சபை,
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: