🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉மாணவர் தலைவர்களுக்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு…!
✍️School Media Unit
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………….
✅👉கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் முதன்முறையாக ஏற்பாடு
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக, தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு (16) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பிரிவினரால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. டி.எம்.எம்.கே. தஸாநாயக்க மற்றும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டு, வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகள், வீதியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகள், போக்குவரத்துச் சின்னங்களின் முக்கியத்துவம் மற்றும் வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
மேலும், மாணவர்கள் மத்தியில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஒழுக்கமானதும் பொறுப்புணர்வு மிக்கதுமான வீதிப் பாவனையாளர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலும் இச்செயலமர்வு பயனுள்ளதாக அமைந்தது.
இச்செயலமர்வை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. லசந்த களுவாராய்ச்சி அவர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






0 comments: