🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு ரஹ்மத் பவுண்டேஷன் மருந்து வழங்கும் பொதி வழங்கி வைப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………
✅👉 வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க முதற்கட்டமாக உதவிகள் வழங்கப்பட்டன
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் மருந்து வழங்கும் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17) இடம்பெற்றது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முதற்கட்டமாக ஒரு தொகுதி மருந்துப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திரு. அகிலன் மற்றும் வைத்தியர் MA. பர்ஹானா உள்ளிட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் நலனுக்காகச் சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் ரஹ்மத் பவுண்டேஷனின் இந்நடவடிக்கை, வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஒரு மனிதநேயச் செயற்பாடாகும்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள், ரஹ்மத் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அடையாளம் கண்டு, உரிய தரப்பினரின் வேண்டுகோள்களுக்கு முன்னுரிமை அளித்து உதவிகளை வழங்கும் ரஹ்மத் பவுண்டேஷனின் இத்தகைய சமூக நலப் பணிகள், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகின்றன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











0 comments: