Monday, October 19, 2026

மக்களின் அடிப்படைத் தேவைக்கு முன்னுரிமை – பாலமுனையில் பொதுக்கிணற்றைத் திறந்து வைத்தார் ரஹ்மத் மன்சூர்…!

Ad 728x90


 📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 மக்களின் அடிப்படைத் தேவைக்கு முன்னுரிமை – பாலமுனையில் பொதுக்கிணற்றைத் திறந்து வைத்தார் ரஹ்மத் மன்சூர்…!


✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..


​✅👉 பாலமுனை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுக்கிணறு, ரஹ்மத் மன்சூர் அவர்களால் பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.


​அதிகரித்து வரும் நீர்க்கட்டணங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் அத்தியாவசிய நீர்த் தேவைக்குத் தீர்வளிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


​கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகரும் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலில், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அனுசரனையில் இப்பொதுக்கிணறு நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.


​இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரஹ்மத் மன்சூர் அவர்கள் பொதுக்கிணற்றைத் திறந்து வைத்து, அதன் பயன்பாட்டை உத்தியோகபூர்வமாக மக்களிடம் ஒப்படைத்தார்.

​மக்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குச் சாத்தியமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ரஹ்மத் பவுண்டேசன் தொடர்ச்சியாகப் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.


​மனிதநேயம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்தகைய திட்டங்கள், அத்தியாவசியத் தேவைகளால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதுடன், சமூக நலன்சார் பணிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: