🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசலின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றிய ரஹ்மத் பவுண்டேஷன்…!
✅👉 பள்ளிவாசலின் உள் சுற்றுப்பகுதிக்கான திரைச்சீலைகள் வழங்கி வைப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………….
✅👉 மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசலின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அதன் உள் சுற்றுப்பகுதிக்கான திரைச்சீலைகள் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் சார்பில் வழங்கி வைக்கப்பட்டன.
பள்ளிவாசலின் உள் சுற்றுப்பகுதிக்குத் திரைச்சீலைகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்த ரஹ்மத் மன்சூர் அவர்கள், பள்ளிவாசலின் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். இதற்கமைய, குறித்த திரைச்சீலைகள் பள்ளிவாசல் தலைவரின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
சமூகத்தின் தேவைகளை அறிந்து, அவற்றுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்கும் மனிதநேயப் பணியின் ஓர் அங்கமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. குறிப்பாக, பள்ளிவாசலுக்கு வருகை தரும் பெண்கள் உள்ளிட்ட தொழுகையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பள்ளிவாசலின் உட்புற ஒழுங்கைப் பேணுவதற்கும் இவ்வுதவி பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி. சமால்தீன், பள்ளிவாசல் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மக்களின் தேவைகளை அறிந்து, மனிதநேயத்துடன் உடனடியாகச் செயற்படும் ரஹ்மத் பவுண்டேஷனின் சமூக சேவைகள் தொடர்கின்றன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
















0 comments: