🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மனிதநேயப் பணியில் ரஹ்மத் பவுண்டேஷன்: சாய்ந்தமருது அல்-பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி வழங்கி வைப்பு…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
✅👉 அல்-பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் கோரிக்கைக்கு உடனடிப் பதில்…!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………….
✅👉 சமூகத்தின் தேவைகளை அறிந்து, மனிதநேயப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், சாய்ந்தமருது அல்-பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி (Generator) ஒன்றை வழங்கி, தனது சமூகப் பணியில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைப் பதித்துள்ளது.
குறித்த அமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், மின்தோற்றியை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) சாய்ந்தமருது அல்-பதாஹ் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
சாய்ந்தமருது அல்-பதாஹ் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவரும், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகருமான ரபீக் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது அல்-பதாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் சகோதரர் ரிபாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாஸா தொடர்பான சமூகப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளின் தேவைகளை இனங்கண்டு, அவற்றுக்குத் துரிதமாக உதவிக்கரம் நீட்டுவது சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும். அந்த வகையில், மின்தோற்றி வழங்கப்பட்டமை, குறித்த அமைப்பின் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்குப் பயனளிக்கும் முக்கிய உதவியாக அமைந்துள்ளது.
மக்களின் தேவைகளை உணர்ந்து, கோரிக்கைகளுக்குத் துரிதமாகப் பதிலளித்து, சமூக நலனை முன்னிறுத்திச் செயற்படும் ரஹ்மத் பவுண்டேஷனின் இத்தகைய மனிதநேயப் பணிகள் சமூக மட்டத்தில் பாராட்டைப் பெற்று வருகின்றன.
மனிதநேயமே முதன்மை; சமூக சேவையே இலக்கு…!
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




















0 comments: