Monday, October 19, 2026

மனிதநேயப் பணியில் ரஹ்மத் பவுண்டேஷன்: கல்முனை Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பிற்குக் கதிரைகள் வழங்கி வைப்பு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 மனிதநேயப் பணியில் ரஹ்மத் பவுண்டேஷன்: கல்முனை Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பிற்குக் கதிரைகள் வழங்கி வைப்பு…!


✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………


✅👉 அமைப்பின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை!


✅👉 சமூகத்தின் தேவைகளை அறிந்து, மனிதநேயப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், கல்முனை Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாகக் கதிரைகளை வழங்கி வைத்துள்ளது.


இக்கதிரைகள் வழங்கும் நிகழ்வு (17.10.2026) Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்துகொண்டு, தனது பொற்கரங்களினால் கதிரைகளை வழங்கி வைத்தார்.


ஜனாஸா நலன்புரி அமைப்புகளின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதும், அவற்றின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதும் சமூகப் பணிகளில் முக்கியமானதாகும். அந்த வகையில், Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளித்து இவ்வுதவியை வழங்கியுள்ள ரஹ்மத் பவுண்டேஷனின் செயற்பாடு பாராட்டத்தக்கதாகும்.


இந்நிகழ்வில் Young Birds ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள், ரஹ்மத் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


“மக்களின் தேவைகளை அறிந்து, மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டுவோம்” என்ற நோக்கில் ரஹ்மத் பவுண்டேஷன் முன்னெடுத்து வரும் சமூகநலப் பணிகளின் தொடர்ச்சியாக இவ்வுதவி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: