🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இருளில் மூழ்கிய பாதைக்கு ஒளியேற்றிய ரஹ்மத் பவுண்டேஷன்…!
✅👉 சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத் திட்ட மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு வெளிச்சம் வழங்கும் மனிதநேயப் பணி…!
✍️ எம்.சி.எம்.ஷம்சுல் முனா
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..
✅👉 சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத் திட்டப் பகுதியில், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்பட்டதுமான பிரதான பாதைக்கு மின்விளக்குகளைப் பொருத்தி ஒளியூட்டும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் பயணிப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனைக் கருத்திற்கொண்ட அப்பகுதி மக்கள், தங்களது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் அன்றாடப் போக்குவரத்தினை இலகுவாக்கும் வகையிலும், இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணச் சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், குறித்த பாதைக்கு மின்விளக்குகளை வழங்கிப் பொருத்தும் பணியை ரஹ்மத் பவுண்டேஷன் முன்னெடுத்தது.
அதன் நிறைவாக, பொருத்தப்பட்ட மின்விளக்குகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள், ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மக்களின் தேவைகளை நேரில் அறிந்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் செயற்படுவதே உண்மையான சமூக சேவை என்பதற்கு இத்திட்டம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மக்களின் தேவைகளே முன்னுரிமை; மனிதநேயச் சேவையே இலக்கு!
ரஹ்மத் பவுண்டேஷன் – கல்முனை
Serving Humanity with Compassion
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












0 comments: