Sunday, October 11, 2026

அல் ஸுஹரா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு – 2026…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 அல் ஸுஹரா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு – 2026…!


✍️ யு.எல். அலி. ஜமாயில்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………..


✅👉 கமு/கமு/கல்முனை அல் ஸுஹரா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு (06.10.2026) பாடசாலை அதிபர் எம்.எச் எஸ்.ஆர். மஜிதியா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


தமது வாழ்நாளை அர்ப்பணிப்புடனும் தியாக உணர்வுடனும் கல்விச் சேவைக்காக அர்ப்பணித்து வரும் ஆசிரியர்களின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்வு இரு கட்டங்களாக நடைபெற்றது. முதலாம் கட்டமாக, காலையில் அனைத்து ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றதுடன், மாணவர்கள் ஆசிரியர்களை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றனர்.


அதனைத் தொடர்ந்து, பிற்பகல் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் பிரதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எச். எம். ஜாபிர், EPSI ஒருங்கிணைப்பாளர் ஐ. எல். ஏ. ரஹ்மான்,பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) செயலாளர் எம். டீ. எப். அனப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது, அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் மாணவர்களை வழிநடத்தி வரும் அனைத்து ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) செயலாளர் எஸ். எச். எம். அஜ்வாத் (Deshamanya), SDEC உறுப்பினர்களான எம். ஜெ. எம். ஜஸீல், ஏ. எல். எம். முர்ஷித் முஃப்தி, எம். ஜே. எம். சமீர், ஐ. எஸ். சித்தி ஷெரீன் உள்ளிட்ட SDEC உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு, மரியாதை மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: