Sunday, October 11, 2026

சர்வதேச கராத்தே போட்டி: இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகர் கராத்தே அணி…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 சர்வதேச கராத்தே போட்டி: இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தர்கா நகர் கராத்தே அணி…!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………………


✅👉 இந்தியாவின் ஹைதராபாத் நகரில் எதிர்வரும் 2026 டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தர்கா நகரைச் சேர்ந்த கராத்தே அணி பங்கேற்கத் தயாராகி வருகிறது.


பயிற்சியாளர் மர்ஜான் ஹரீர் தலைமையில் களமிறங்கும் இவ்வணி, சர்வதேச மட்டத்திலான போட்டியொன்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தர்கா நகர் வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.


தர்கா நகரிலிருந்து கராத்தே அணியொன்று சர்வதேச போட்டியில் பங்கேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சாதனை குறித்து கருத்து தெரிவித்த பிரதேச மக்கள், பயிற்சியாளர் மர்ஜான் ஹரீரின் தொடர்ச்சியான தீவிர பயிற்சியும் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டுதலுமே இவ்வாறானதொரு சர்வதேச வாய்ப்பிற்குக் காரணம் எனப் பாராட்டு தெரிவித்தனர்.


அத்துடன், பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை இனங்கண்டு தொடர்ச்சியாக ஊக்கமளித்து வரும் பெற்றோர்களின் பங்களிப்பும் பெரிதும் போற்றத்தக்கது என சுட்டிக்காட்டினர்.


சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயற்பட்டு, வெற்றிக் கோப்பைகளை வென்று நாட்டின் தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்யவுள்ள தர்கா நகரின் கராத்தே வீரர்களுக்குத் தர்கா நகர் மக்கள் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: