📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இறக்காமம் இளைஞர் கழக அணி மாவட்ட மட்ட கயிறிழுத்தல் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு…!
✍️ ஏ.எச்.றகீப்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………………………..
✅👉 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் அம்பாரை மாவட்டத்திற்கான போட்டிகள் அட்டாளைச்சேனை பொது மைதானத்தில் நடைபெற்றன.
இத்தொடரில், கயிறிழுத்தல் போட்டியில் இறக்காமம் பிரதேச IRFC கழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாவட்ட மட்டப் போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்ட மட்ட இப்போட்டியில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் கழக அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறக்காமம் இளைஞர் கழக அணி வீரர்கள் சிறந்த ஒருங்கிணைப்பு, குழு உணர்வு, உடல் வலிமை மற்றும் தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றியைத் தமதாக்கினர்.
இந்த வெற்றியின் மூலம் இறக்காமம் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் 2026.09.19 ஆம் திகதி மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கயிறிழுத்தல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள இவ்வணி, இறக்காமம் பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறனை தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்று பிரதேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.
அணியை வழிநடத்திய இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஆர். றியாஸ், வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்
தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி இறக்காமம் பிரதேசத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





0 comments: