Saturday, September 19, 2026

மத்தியஸ்தசபை அறிமுகமும் முரண்பாடுகளைக் கையாளுதலும்’ தொடர்பான செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றது…!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 மத்தியஸ்தசபை அறிமுகமும் முரண்பாடுகளைக் கையாளுதலும்’ தொடர்பான செயலமர்வு சிறப்பாக இடம்பெற்றது…!


✍️ ஏ.எச்.றகீப்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………………


✅👉 இறக்காமம் பிரதேச செயலகத்தில் ‘மத்தியஸ்தசபை அறிமுகமும் முரண்பாடுகளைக் கையாளுதலும்’ எனும் தொனிப்பொருளில் முக்கியத்துவமான செயலமர்வு 2026.09.17 வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


மக்களிடையே ஏற்படும் பல்வேறு வகையான தனிநபர், குடும்ப, சமூக மற்றும் பிற முரண்பாடுகளை சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் மத்தியஸ்தசபைகளின் பங்களிப்புத் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாற்றாக, சமூக மட்டத்தில் முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வின் மூலம் தீர்த்துக் கொள்வதில் மத்தியஸ்த முறையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.


அத்துடன், முரண்பாடுகளின் அடிப்படைக் காரணிகளை அடையாளம் காணுதல், இரு தரப்பினரினதும் கருத்துக்களைப் பொறுமையுடன் செவிமடுத்தல், நடுநிலைத் தன்மையைப் பேணுதல், உரையாடல் மூலம் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத் தீர்வை ஏற்படுத்துதல் போன்ற முரண்பாடுகளைக் கையாளும் நடைமுறைகள் மற்றும் திறன்கள் தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்டது.


குடும்பப் பிரச்சினைகள், சமூகத்தில் ஏற்படும் முரண்பாடுகள், காணி மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள், சிறிய சமூக முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே சுமூகமாகத் தீர்ப்பதன் மூலம் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


இச்செயலமர்வின் வளவாளராக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்தசபை பயிற்றுனர் எம்.ஐ.எம். ஆஷாத் அவர்கள் கலந்து கொண்டு, மத்தியஸ்தசபையின் செயற்பாடுகள் மற்றும் முரண்பாடுகளை பயனுள்ள வகையில் கையாள்வதற்கான நடைமுறை சார்ந்த விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.


இதன் மூலம் பங்கேற்பாளர்கள் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் போது அவற்றைப் பதற்றமின்றி அணுகுதல், தொடர்புடைய தரப்பினருடன் பயனுள்ள தொடர்பாடலை மேற்கொள்ளுதல் மற்றும் சுமூகமான தீர்வை நோக்கி வழிநடத்துதல் தொடர்பான அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொண்டனர்.


இச்செயலமர்வு பங்கேற்பாளர்களுக்கு மத்தியஸ்தசபையின் செயற்பாடுகள் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தியதுடன், எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் முரண்பாடுகளை அமைதியான முறையில் கையாள்வதற்கான நடைமுறை அறிவையும் வழங்கியதாக அமைந்தது.


இந்நிகழ்வானது மத்தியஸ்தசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. பௌசூன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,

பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.ஐ. பஸீனா மற்றும் எம்.எச். வஹாப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் மற்றும் மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் சுவர்னா ஹேமலதா ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.


அம்பாறை மாவட்ட சமுர்த்தி நிருவாக முகாமையாளர் மற்றும் 

இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல். நெளபீர், இறக்காமம் மத்தியஸ்தசபையின் தவிசாளர் எஸ்.ஐ. பஸ்லுல் ஹக், செயலாளர் கே.எல். சமீர், இறக்காமம் காதி நீதவான் அஷ்ஷெய்க் ஏ.எம். றஷீட், மத்தியஸ்தசபை உறுப்பினர்கள், ஜம்மியத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள், பள்ளிவாசல்களின் பிரதம நிர்வாகிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக மட்டத் தலைவர்கள், ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள், ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள் உட்பட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: