Saturday, September 19, 2026

ஆசிரியர்களுக்கான "மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்" தொடர்பான செயலமர்வு…!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ஆசிரியர்களுக்கான "மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்" தொடர்பான செயலமர்வு…!


✍️ ஏ.எச்.றகீப்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………….


✅👉 பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் சமூகவியல் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் நோக்கில் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட "மாணவர் உள ஆரோக்கியம் மற்றும் முரண்பாடுகளை கையாளுதல்" தொடர்பான 

செயலமர்வு 2026.09.16ம் திகதி (புதன்கிழமை) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.


பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மனநல வைத்தியர் யூ.எல். சராப்டீன் அவர்கள் இச்செயலமர்வின் வளவாளராகக் கலந்து கொண்டதோடு ஆசிரியர்களுடன் செயற்பாட்டு ரீதியாகப் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடினார். ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.


சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் அபிவிருத்திப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளரும் இறக்காமம் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.எம். சியாட் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வானது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் அம்பாரை மாவட்ட செயலகத்தின் மாவட்ட உளச்சமூக உத்தியோகத்தர் யூ.எல். அஸார்டீன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். ஜெகநாதன், இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எம்.ஐ. பஸீனா மற்றும் எம்.எச். வஹாப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. 


மேலும் இந்நிகழ்வில், பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களான உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா, மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் சுவர்னா ஹேமலதா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 


இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆசிரியர்கள் பலரும் கலந்து பயன்பெற்ற இச்செயலமர்வின் உயிரோட்டமான இயங்கியல் பற்றி ஆசிரியர்களால் ஆரோக்கியமான பின்னூட்டங்கள் பகிரப்பட்டதோடு, இவ்வாறான துறைசார் வளவாளர்களைக் கொண்டு தொடர்ந்தும் இதுபோன்ற பயனுள்ள செயலமர்வுகளை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: