🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்...!
✍️ எம்.என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………………
✅👉 தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), பொலிஸார், முப்படையினர் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்கள், வெற்றி வளவுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றுதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். எனவே, தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்கள் மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் இல்லாதவாறு பேணுமாறு பொது மக்களுக்கு சுகாதார பிரிவினர் மேலும் ஆலோசனை வழங்கினர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









0 comments: