Thursday, July 16, 2026

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் குழுவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சந்திப்பு..!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


​✅👉 கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் குழுவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சந்திப்பு..!


✍️ எஸ். சினீஸ் கான் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


​✅👉 கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மலேசியா, வியட்னாம், தாய்லாந்து நாடுகளின் தூதுவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று (11) அருகம்பே Blue Wave ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர்.


​இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வாய்ப்புகள், தற்போதைய சமூகப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பிராந்திய ரீதியாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து தூதுவர்கள் குழுவினருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.


​இச்சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் அப்துல் வாசித், எம்.எஸ் உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


​ஊடகப்பிரிவு


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: