🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை நூறானியா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிய டோம் மற்றும் மினாரா பிரம்மாண்டமாக திறந்து வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………………….::::
✅👉 கல்முனை நூறானியா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய டோம் (Dome) மற்றும் மினாரா (Minaret) ஆகியவற்றின் திறப்பு விழா (19.07.2026) சிறப்பாக நடைபெற்றது.
சுமார் ரூ. 2.5 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இப்புனர்நிர்மாணப் பணிகள் YWMA அமைப்பின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன.
பள்ளிவாசல் தலைவர் எம். எஸ். உதுமாலெவ்வை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ சிறப்பு விருந்தினராக YWMA அமைப்பின் தலைவி பவாஸா தாஹா அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவராச்சி, கல்முனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஏ. அப்துல் அஸீஸ், செயலாளர் முபாரிஸ் எம். ஹனிபா, நூறானியா பள்ளிவாசல் செயலாளர் அலி சாப்ரி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன்,YWMA அமைப்பின் உறுப்பினர்கள், ஏ.சி.எம். முஹைதீன் மன்பயீ மௌலவி, அல்ஹாஜ் எம்.ஐ.எம். ரியாஸ் அல்தாபி மௌலவி, அல்ஹாஜ் பி.எம்.ஏ. ஜலீல் பாகவி மௌலவி, சபா முஹம்மத் நஜாஹி காதிரி மௌலவி, முகையித்தீன் மௌலவி, ஜுனைத்தீன் மௌலவி, கமு/அல்-மிஸ்பா தேசிய பாடசாலையின் அதிபர் ரஸாக், கல்முனை பத்ரியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹனிபா (நிசார்), அஸ்ரோ அமைப்பின் தலைவர் ரியால், கல்முனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி நஜீம், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் மகளிர் அணி தலைவர் சுல்பிகா ஷரீப், தொழிலதிபர்களான அஸ்லம் DX, ஹிமாஸ் (Central Hardware), சமூக சேவையாளர் ரினோஸ் மற்றும் இளைய தம்பி காக்கா, பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது, பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பிரதம அதிதி உள்ளிட்ட முக்கிய பங்களிப்பாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பொன்னாடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து YWMA அமைப்பின் சார்பில், சமூகப் பணிகளுக்காக ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு அமைப்பின் தலைவி பவாஸா தாஹா அவர்களினால் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலின் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், மார்க்க நிகழ்வுகள் மற்றும் இறுதியில் விசேட துஆப் பிரார்த்தனையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






















0 comments: