Thursday, July 23, 2026

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வுழூ நீர்த்தொகுதி கையளிப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வுழூ நீர்த்தொகுதி கையளிப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

நிருபர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……………….


✅👉 சாய்ந்தமருது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகைக்கு வருகை தரும் பொதுமக்கள் வுழூ செய்வதற்கான நீர்வசதியை மேம்படுத்தும் நோக்கில், மிகவும் அவசியமான வுழூ நீர்த்தொகுதி ஒன்றை அமைத்துத் தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


அக்கோரிக்கைக்கு இணங்க, Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலும் பணிப்புரையின்படியும், மிகக் குறுகிய காலத்திற்குள் வுழூ நீர்த்தொகுதி அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில், கொழும்பிலிருந்து வருகை தந்த Y.W.M.A. பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும், பேரவையின் உறுப்பினர்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு, வுழூ நீர்த்தொகுதியை பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் கையளித்து வைத்தனர்.


மேலும், இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள், நலன்விரும்பிகள், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு உடனுக்குடன் நிறைவேற்றும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் சமூகப் பணிகளில், இத்திட்டமும் மேலும் ஒரு பயனுள்ள சேவையாக அமைந்துள்ளது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: