Thursday, July 23, 2026

சம்மாந்துறை Oxford பாலர் பாடசாலைக்கு மின் இணைப்பு ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰


✅👉 சம்மாந்துறை Oxford பாலர் பாடசாலைக்கு மின் இணைப்பு ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் வழங்கி வைப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்

நிருபர்


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………..


✅👉 கல்விக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் தனது மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அனுசரணையில் சம்மாந்துறை Oxford பாலர் பாடசாலைக்கு மின் இணைப்பு இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் திருமதி இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மின் இணைப்பை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.


மேலும், YWMA அமைப்பின் தலைவி பவாசா தாஹா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ரஹ்மத் பவுண்டேஷனின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளர் இர்பான் ஹாபீழ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.


அத்துடன், YWMA அமைப்பின் உறுப்பினர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


கல்வி என்பது ஒரு சமூகத்தின் நிலையான முதலீடு என்ற உயரிய நோக்குடன், பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ரஹ்மத் பவுண்டேஷன் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மின் இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் Oxford பாலர் பாடசாலையின் கல்விச் சூழல் மேலும் மேம்பட்டு, சிறார்களின் கற்றல் பயணத்திற்கு புதிய ஒளிக்கீற்றாக அமையும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: