Saturday, June 20, 2026

லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு வரவேற்பு விழா..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு வரவேற்பு விழா..!


✍️ மாளிகைகாடு செய்தியாளர் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………..


✅👉 கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக சாய்ந்தமருது முஹைய்யத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம், அல்ஹாபிழ் அல்-ஆலிம் உஸாமா பரீட் (ஸஹ்தி) அவர்கள் கலந்துகொண்டு, இஸ்லாமிய புத்தாண்டின் வரலாறு, அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.


நிகழ்வில் விசேட அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், கிழக்கு மாகாண கணனி தகவல் தொழில்நுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல். நூருல் ஹுதா உமர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும், பாடசாலை பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதீம், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வை முன்னிட்டு மாணவர்களின் பல்வேறு இஸ்லாமிய கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அண்மையில் நடைபெற்ற கணித வினா-விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் திறமைகள் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு பங்கேற்பாளர்களின் பாராட்டைப் பெற்றது.


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: