Thursday, June 18, 2026

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட மாலைதீவு பிரதிநிதிகளால் அட்டாளைச்சேனை பிரதேச மீனவர் சங்கத்திற்கு பொதுக்கிணறு வழங்கிவைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட மாலைதீவு பிரதிநிதிகளால் அட்டாளைச்சேனை பிரதேச மீனவர் சங்கத்திற்கு பொதுக்கிணறு வழங்கிவைப்பு..!


✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம் 


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇…………….


✅👉 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்த மாலைதீவு பிரதிநிதிகளால், அட்டாளச்சேனை பிரதேசத்தின் அட்டாளைச்சேனை 8ம் பிரிவு மீனவர் சங்கத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுக்கிணறு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


அட்டாளைச்சேனை 8ம் பிரிவு மீனவர் சங்க மக்களின் நீண்டகால அத்தியாவசிய தேவையாகக் காணப்பட்ட பொதுக்கிணறு தொடர்பில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கைக்கு அமைவாக, YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிகக் குறுகிய காலத்திற்குள் பொதுக்கிணறு நிர்மாணிக்கப்பட்டது.


இப்பொதுக்கிணற்றை திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில், மாலைதீவைச் சேர்ந்த Neurodiversity Association Male அமைப்பின் இணை நிறுவுநர் (Co-Founder) Aminath Azeema அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கிணற்றை மீனவர் சங்கத்திடம் கையளித்தார்.


மேலும், சமூக நலச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.


இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் ஹலீம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி. நியாஸ், அஸ்வர் சாலிஹ், மீனவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


"மக்களின் தேவையை உணர்ந்து, குறுகிய காலத்திலேயே நிரந்தரத் தீர்வை வழங்கும் சேவையே உண்மையான சமூகப் பணி."


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: