𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” (Rebuilding Sri Lanka) எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுவது, எமது நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய அழைப்பாகும். நாட்டை முன்னேற்றவும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நின்று அனைத்து மக்களும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
எமது நாடானது பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் இணைந்து உருவான அழகான தேசம். அந்த பல்வகைத் தன்மையே எமது பலமாகும். அந்த பலத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மக்களும் அச்சமின்றி, நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படுவதும், அந்த உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதும் உண்மையான சுதந்திரத்தின் அடையாளமாகும். நீதியும், சமத்துவமும், நல்லிணக்கமும் நிலவும் ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த சுதந்திர தினம், புதிய நம்பிக்கையுடன், புதிய சிந்தனையுடன், ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 78வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதித்தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: