Friday, February 6, 2026

நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு என்றும் பாராட்டத்தக்கவை..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு என்றும் பாராட்டத்தக்கவை..!
✅👉 கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து செயல்பட வேண்டும்.
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 எமது நாடு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவை நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு மிக மிக முக்கியமானதாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது எனலாம்.
விலை உயர்வுகள், வேலைவாய்ப்பின்மை, நாணய மதிப்பிழப்பு போன்ற பிரச்சினைகள் மக்களிடையே பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. இவற்றினை சமாளிக்கும் பொறுப்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி தாராளமாக முன்னெடுத்தார். மிக மோசமான சூழ்நிலைகளிலும் அவர் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து, நிலையான பொருளாதாரத் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திலும் ஜனாதிபதியின் செயல்திறன் வெளிப்படுத்தப்பட்டது. சமீபத்தில் தித்வா புயல் நாட்டை மிக மோசமாக தாக்கியபோதும், அவருடைய நேரடி கண்காணிப்பில் பேரழிவுகளை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட்டன. அரசு அதிகாரிகள், ராணுவம் மற்றும் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் விரைவாக சென்றடைந்தன.
ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, ஒரு தலைவராக மக்களுக்கு நம்பிக்கையும் உறுதியையும் வழங்கின. மக்கள் தற்போது அரசியல்வாதிகள் மற்றும் கட்சிக் கோட்பாடுகளுக்குள் பிரிபடாமல் ஜனாதிபதியின் செயல் திறன் மற்றும் நேர்மையான முயற்சிகளை நேரடியாக பாராட்டி, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றமை, ஜனாதிபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது எனலாம்.
அதேபோல், நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் ஒற்றுமைதான் மிக முக்கியமாக உள்ளது. கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து செயல்பட வேண்டும். அரசு, மக்களின் ஒற்றுமை தான் நாட்டை மோசமான சவால்களிலிருந்து மீட்கும் முக்கிய கருவியாக காணப்படுகிறது.
இலங்கையின் எதிர்காலம் இன்னும் வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு, அனைத்து பிரதேசங்களிலும் ஒருமித்த முயற்சிகள் மிக அவசியமாக உள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பு மற்றும் பாராட்டத்தக்க சேவைகள், நாட்டின் மக்களை மாற்றம் மற்றும் முன்னேற்றம் நோக்கி ஊக்குவிக்கின்றன. மக்களின் நம்பிக்கை, அரசின் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை ஒன்றிணைந்தால், இலங்கை விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் முன்னேறும் என்பது உறுதியாகும்.
நாம் அனைவரும் அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் ஒன்றிணைவதுதான் எமது நாட்டின் வளர்ச்சியையும், மக்களின் நலனையும் உறுதி செய்யும் மிகச் சிறந்த வழி ஆகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: